News Channel

கெளரவிப்பு

தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” உயர் கல்வித் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட தேர்வில்
7,000 மாணவர்களில் 21 பேர் மட்டுமே தேர்வான நிலையில்,
அதில் ஒருவராக இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) திருப்பூர் மாவட்ட தலைவர் – முஹம்மது அனஸ் அவர்கள் தேர்வாகியிருப்பது பெருமைக்குரிய சாதனையாகும். 
இந்தச் சிறப்பான சாதனையைப் பாராட்டி,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – திருப்பூர் கிளை சார்பாக கௌரவிப்பு வழங்கப்பட்டது.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக
கல்வி • ஒழுக்கம் • சமூக பங்களிப்பு
ஆகிய துறைகளில் சிறந்த மாணவர்களை உருவாக்கி வரும்
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் பணிக்கான நிஜமான சான்று இச்சாதனை.
மேலும் பல உயரிய சாதனைகள் படைக்க
முஹம்மது அனஸ் அவர்களுக்கு மனமார வாழ்த்துகள்!