News Channel

இறை இல்லத்தில் சகோதரத்துவ சந்திப்பு நிகழ்ச்சி - புதுச்சேரி

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் புதுச்சேரி சார்பாக "இறை இல்லத்தில் சகோதரத்துவ சந்திப்பு நிகழ்ச்சி" இதர மத நண்பர்களுக்காக டிசம்பர் (28.12.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை புதுச்சேரி வானரப்பேட் மஸ்ஜித்துல் ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு புதுச்சேரி வானரப்பேட் மஸ்ஜித்துல் ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் பள்ளிவாசல் முத்தவல்லிகள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வின் துவக்கமாக இறைவசனம் மௌலவி முஹம்மத் அமீன் ஓத அதன் தமிழாக்கத்தை சகோ. அப்சல் பாஷா வாசித்தார். 

இந்நிகழ்ச்சியை சகோ. அன்வர் அலி தொகுத்து வழங்கினர், முன்னதாக பள்ளிவாசல் நிர்வாகி. சகோ. கலீல் அனைவரையும் வரவேற்றார். 

இந்நிகழ்ச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் புதுச்சேரி மண்டல அமைப்பாளர் சகோ. அப்துல் ஹமீது கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்,   

மேலும் தனது சிறப்புரையில், 

- இந்த நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து விளக்கினார், 

- மேலும் பள்ளிவாசலில் நடைபெறும் தொழுகை முறை, இன்ன பிற வழிபாடுகள் குறித்தும், அதன் நோக்கங்கள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் மிக விளக்கமாக கூறினார்.

- மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் இஸ்லாம் சம்பந்தமான தங்கள் சந்தேகங்கள் குறித்து கேள்வி பதில் நிகழ்ச்சியின் மூலம் கேட்டு தெரிந்து கொண்டனர். 

நிகழ்ச்சியின் இறுதியாக லுஹர் தொழுகை நிகழ்வை விருந்தினர்கள் அனைவரும் பள்ளிவாசலின் உள்ளே அமர்ந்தும், சிலர் தொழுகையில் கலந்து கொண்டும் சிறப்பித்தனர், மேலும் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு இஸ்லாமிய புத்தகம், இதழ்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சகோதர சமுதாயத்தை சார்ந்த பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பல நாட்களாக உள்ளே வர விருப்பமாக இருந்ததாகவும், அந்த கனவு இன்று நினைவாகியுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்
மேலும் இது போன்ற நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர்
அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி மகிழ்ச்சியுடன் நிறைவுற்றது.