News Channel

புதுச்சேரி சமூக நல்லிணக்க இயக்கம்

புதுச்சேரி சமூக நல்லிணக்க இயக்கம் சார்பாக நடைபெற்ற குழந்தைகள் வாசிப்பு திருவிழா:

புதுச்சேரி சமூக நல்லிணக்க இயக்கம் சார்பாக நடைபெற்ற குழந்தைகள் வாசிப்பு திருவிழாவில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் புதுச்சேரி சார்பாக கலந்து கொண்டு சிறப்பிக்கப்பட்டது,

நிகழ்ச்சியில் குழந்தைகளின் வாசிப்பு திறனை வளர்க்க பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன,

குழந்தைகளுக்கு புத்தகம் படிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது, மேலும் சிந்தனைத் திறனை வளர்க்க சமூகம் சார்ந்த மனிதநேய, சகோதரத்துவ சம்பவங்கள் எடுத்துக்காட்டுகள் மூலம் உரை நிகழ்த்தப்பட்டது.

கதைகள் வாசிப்பு, கற்றல் திறன் வளர்ப்பு, கதை சொல்லுதல் என வாசிப்பு சார்ந்த பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பலசமய குழந்தைகள் பலர் இதில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.