News Channel

மக்கள் சேவை

திருச்சி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மக்கள் சேவை துறை சார்பாக இன்று நாகமங்கலம் அருகில் உள்ள காந்திநகரில் உள்ள பார்வையற்ற, மாற்றுதிறனாளிகள் சுமார் 52 நபர்களுக்கு போர்வைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர் திரு.சீனிவாசன், பார்வையற்ற நலசங்க தலைவர் திரு மாரியப்பன் கலந்துகொள்ள,
சத்தியச்சோலை பொறுப்பாளர் ஜனாப் TE நாசர் சாஹிப் கலந்துகொண்டு சிறு உரையாற்றி உதவிகளை வழங்கினார்.,
மேலும் பீமநகர் வட்டப்பொறுப்பாளர்  ஜனாப் அப்துல் சலாம் , மக்கள் சேவை துறை செயலாளர் ஜனாப் நவாஸ்கான் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

 2026 ஆம் ஆண்டு முதல் நாளில் போர்வைகள் தந்ததை பயனாளிகள் பாராட்ட, பொருளாளர் திருசுரேஷ் நன்றி கூறினார்.

 எல்லாம் வல்ல அல்லாஹ் நமது நற்காரியங்களை ஏற்றுக் கொள்வானாக..
 ஆமீன்.