நமது IRW TN தன்னார்வலர்கள் ஒரு நாள் பயிற்சி முகாம் (15.2.2026) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஏற்காடு ( சேலம் மாவட்டம்) பள்ளிவாசலில் நடைபெற்றது.
காலை Trekking எனப்படும் நடைப்பயிற்சி செய்துமுடித்துவிட்டு பின்னர் பள்ளிவாசலின் உள்ளே அனைவருக்கும் குத்புதீன் பாய் Dynamic Stretch எனப்படும் உடற்பயிற்சி Drills கற்றுக்கொடுத்தார். அதன்பின்னர் Tea ☕யோடு தொடங்கியது தர்பியா.
இதில் பள்ளி இமாம் மௌலானா சையத் மசூத் அவர்கள் குர்ஆன் கிராஅத் ஓதினார்.
தேனி சகோதரர் கனி பாய் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
தலைமை தாங்கி நடத்திய IRW TN மாநில தலைவர் அசாருதீன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மாநில செயலாளர் சகோதரர் முஹம்மது ஆரிப் அவர்கள் IRW TN நோக்கங்கள் அதன் உடல்ரீதியான, ஆன்மீக ரீதியான பயிற்சியின் மகத்துவத்தையும் IRW 20-12 தர்பியாவை நினைவு படுத்தினார்.
இதன் பின்னர் அனைவரும் கீழ்க்கண்ட அவசரகால மீட்பு மற்றும் நிவாரண பயிற்சிகள் குழு ரீதியாக மேற்கொண்டனர்.
1. First aid
2. CPR
3. Shifting methods
4. Different types of bandages
5. Different knots
6. Last aid ( Janaza ablution)
இறுதியாக சாலிடாரிடி மாநில செயலாளர் சகோதரர் சேலம் ஜாஃபர் சாதிக் நிறைவுரை ஆற்றினார்.
இதில் சுமார் 25 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
மாலை 4.30 மணிக்கு நிகழ்ச்சி முடிந்து அனைவரும் தத்தமது இல்லங்களுக்கு திரும்பிச் சென்றனர்.