இன்று 15.02.2026 (ஞாயிற்றுக்கிழமை)
மாலை சரியாக 5:30 மணிக்கு,
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் – கும்பகோணம் கிளை, மேலக்காவேரி வட்டம்
சார்பாக “ரமலானே வருக” என்ற தலைப்பில்
ஒரு சிறப்பு நிகழ்ச்சி மேலக்காவேரி ஆரிப் சமுதாயக்கூடத்தில் மிகச் சிறப்பாக தொடங்கி நடைபெற்றது.
நிகழ்ச்சி, இக்ரா டியூஷன் சென்டர் ஆசிரியை சகோதரி பாரிஷா திருக்குர்ஆன் கிராத் ஓதி
நிகழ்ச்சியை இனிய முறையில் துவக்கினார்.
இந்த நிகழ்ச்சியை மேலக்காவேரி – சகோதரி ரோஜாக்கனி அவர்கள் மிகவும் ஒழுங்காகவும் சீராகவும் வழிநடத்தினார்.
மேலும்,
ஹாஜா மாலிக் அவர்கள் வரவேற்புரை வழங்கி
நிகழ்ச்சியின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.
அடுத்தபடியாக, சகோதரர் முகமது யூனுஸ் அவர்கள் துவக்க உரை வழங்கினார்.
பின்னர், மேலக்காவேரி நாட்டாமை – அபூபக்கர் அவர்கள் வாழ்த்துரை வழங்கி
நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
மேலும்,
MISWA தலைவர் – ஆசாத் அலி வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர், KISWA செயலாளர் – அப்துல் அஜீஸ்
வாழ்த்துரை வழங்கினார். அதன்பின்,
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் பற்றிய விளக்கமான விரிவுரை
சகோதரி அவர்களால் வழங்கப்பட்டு,
இயக்கத்தின் நோக்கம், பணிகள் மற்றும் சமூகப் பங்களிப்புகள்
விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,
மகரிப் தொழுகைக்காக இடைவேளை விடப்பட்டு, தொழுகைக்குப் பிறகு
மீண்டும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
அதன்பின், இக்ரா பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் திருக்குர்ஆன் ஓதுதல்,
துவாக்கள் சொல்லுதல் போன்ற
பயனுள்ள நிகழ்ச்சிகளை வழங்கினர்.
மேலும், மாணவிகளின் குழு நாடகம்
நடைபெற்று, பங்கேற்பாளர்களிடையே
அதிக கவனத்தையும் பாராட்டையும் பெற்றது.
நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியாக,
சிறப்பு பேச்சாளர் – மௌலவி நாசர் புகாரி அவர்கள் மிகவும் உணர்வூட்டும்
சிறப்புரையை வழங்கி,
ரமலான் மாதத்தின் முக்கியத்துவத்தையும்
நம் வாழ்வில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களையும்
விளக்கினார். இறுதியாக,
சகோதரி ரெஜினா அவர்கள்
நன்றி உரை வழங்க,
நிகழ்ச்சி இரவு சரியாக 8:00 மணிக்கு
இனிய முறையில் நிறைவுபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்
300-க்கும் மேற்பட்ட ஜமாத்தார்கள் மற்றும் பெண்கள்திரளாக கலந்து கொண்டு
நிகழ்ச்சியை மிகுந்த உற்சாகத்துடன் சிறப்பித்தனர். அல்லாஹ் இந்த பயனுள்ள நிகழ்ச்சியை ஏற்றுக்கொண்டு,
இதில் கேட்கப்பட்ட அறிவுரைகளை
நம் வாழ்வில் நடைமுறைப்படுத்த
எல்லோருக்கும் தௌஃபீக் அருள்வானாக.