12.02.2026 வியாழக்கிழமை மாலை 6.30 க்கு
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் – கும்பகோணம் கிளை,
திருநாகேஸ்வரம் வட்டம்
சார்பாக “ரமலானே வருக” என்ற தலைப்பில்
ஒரு சிறப்பு நிகழ்ச்சி திருநாகேஸ்வரம் – R.V. நகர் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி திருக்குர்ஆன் கிராத் மற்றும் அதன் தமிழாக்கம் மூலம் தொடங்கப்பட்டது.
இதனை SIO மாணவர் H. Afdal அவர்கள்
அழகாக ஓதி விளக்கினார். நிகழ்ச்சியை
சகோதரர் சு. அப்துர் ரஹ்மான் அவர்கள்
ஒழுங்காகவும் சீராகவும் வழிநடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, திருநாகேஸ்வரம் – ஹாஜா மாலிக் அவர்கள் வரவேற்புரை ஆற்றி,
ரமலானில் நாம் எடுக்கும் பயிற்சிகள் என்னென்ன என்பதை சிறிய உரையின் மூலம் பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைத்தார்.
பின்னர், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் – கும்பகோணம் கிளை தலைவர்
ஜனாப் அப்துல் கலாம் ஆசாத் அவர்கள்
தலைமை உரை வழங்கி, ரமலான் மாதம்
நம் வாழ்வில் ஏற்படுத்த வேண்டிய
மாற்றங்கள் குறித்து விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட அமைப்பாளர் – முகமது யூனுஸ் அவர்கள் துவக்க உரை வழங்கி நிகழ்ச்சியின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக,
மௌலவி K. உஸ்மான் மிஸ்பாஹி
(இமாம் – இரயில்வே பள்ளிவாசல், கும்பகோணம்) அவர்கள்
“ரமலானே வருக” என்ற தலைப்பில்
மிகவும் பயனுள்ள சிறப்புரையை வழங்கினார்.
இறுதியாக, ஹாஜா மாலிக் அவர்கள்
நன்றி உரை வழங்க, நிகழ்ச்சி இனிய முறையில் நிறைவுபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்
ஆண்கள், பெண்கள் சேர்ந்து மொத்தம் 50 பேர்
ஆர்வமுடன் கலந்து கொண்டு
பயனடைந்தனர்.
அல்லாஹ் இந்த நிகழ்ச்சியை ஏற்றுக்கொண்டு,
இதில் கூறப்பட்ட அறிவுரைகளை
நம் வாழ்வில் நடைமுறைப்படுத்த
எல்லோருக்கும் தௌஃபீக் அருள்வானாக.
ஆமீன்.
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்
கும்பகோணம் கிளை – திருநாகேஸ்வரம் வட்டம்