ஆசிரியர் தினம் சிறப்பு நிகழ்ச்சி
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிருஷ்ணகிரி கிளை & ALL INDIA IDEAL TEACHERS ASSOCIATION
இனைந்து நடத்திய ஆசிரியர் தினம் சிறப்பு நிகழ்ச்சி கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 18.09.2025 வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நகர தலைவர் திரு சிபகத்துல்லாஹ் தலைமை தாங்கி வரவேற்புரை நிகழ்த்தினார்.
மேலும் ஜமாஅத் செய்து வருகின்ற மக்கள் சேவை பணிகளை சிறப்பாக எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த தலைமையாசிரியர் திரு ரமேஷ் அவர்கள் ஆசிரியர் என்பவர் கற்பவராகவும் கற்பிப்பவராகவும் சிறந்து விளங்க வேண்டும் என எடுத்துரைத்தார்.
பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு திருமலை செல்வன் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. முனிராஜ் அவர்கள் கலந்து கொண்டு ஆசிரியர் தினம் என்பது வருடத்திற்கு ஒருமுறை கொண்டாட கூடிய நிகழ்வு அல்ல மாறாக தினம் தினம் போற்றக்கூடிய சிறந்த சமூகம் ஆசிரியர் சமூகம் என்ற கருத்தை முன்வைத்தோடு ஜமாஅத் இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளில் முன்னெடுத்து சிறப்பாக செய்வது எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாகவும் அதே சமயம் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கிறது என்று ஜமாஅத்தை பாராட்டினார்.
அகில இந்திய முன்மாதிரி ஆசிரியர்கள் சங்கம் (AIITA) திரு அப்துல் அலீம் அவர்கள் ஆசிரியர்களோடு கலந்துரையாடல்
முறையில் டாக்டர் ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம் மற்றும்
ஒரு சிறந்த ஆசிரியராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பண்புகள்!
1. தெளிவு மற்றும் எளிமை,
2. பொறுமை மற்றும் மென்மை,
3.முன்மாதிரியாக கற்பித்தல்
4.கற்பவர்களுக்கு ஏற்ப மாற்றியமைத்தல்
5. உந்துதல் மற்றும் ஊக்கமளித்தல் ஆகிய உதாரணம் கொண்டு சிறப்பாக எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியை முஹம்மத் சாலிஹா வழிநடத்தினார்.
ஜமாஅத் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.