News Channel

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மதுரை கிளை சார்பாக நடைபெற்ற ஊழியர் அபிமானிகள்சிறப்பு கூட்டம்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மதுரை கிளை சார்பாக நடைபெற்ற ஊழியர்  அபிமானிகள்சிறப்பு கூட்டம்
5.09.25 அன்று மதுரையில் நடைபெற்றது

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மதுரை கிளை தலைவர்  மௌலவி முஹைதீன் குட்டி உமரி அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்கள்

தொடக்கமாக மதுரை இஸ்மாயில் புரம் பகுதி பொறுப்பாளர்  சகோ. S.முஹம்மது ரஃபிக் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்

இதில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில ஆலோசனை குழ உறுப்பினர் சமரசம் பொறுப்பாசிரியர் சகோ.V.S.முஹம்மது அமீன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்

அவர் உரையில் 
1. தாவாவின் களங்கள்
2. சமூக நல்லிணக்கத்திற் கான வாய்ப்புகள்.
3. சமூகத்தில் நிலவும் நல்ல சான்றுகளும், கெட்ட சான்றுகளும்
4. பணிகளில் இளைஞர்களின் பங்கு
போன்ற விஷயங்களை விளக்கமாக எடுத்துரைத்தார்.
இதில் 
22 பேர்  பங்குபெற்றனர். 

இறுதியாக மதுரை செல்லூர் பகுதி பொறுப்பாளர்  சகோ. A.அவுல் பீர் அவர்களின் நன்றியுரையோடு  நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது