"அன்பானவர்களே !
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....!
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சேலம் வட்டத்தின் சார்பாக 28-9-2025 ஞாயிற்றுக்கிழமை
எல்லோருக்குமானவர் நபிகள் நாயகம் (ஸல்...) மாற்றுமத சகோதரர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஹபீப் பாய் கம்பெனியில்
காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது
நிகழ்ச்சியின் துவக்கமாக
சேலம் வட்ட பொருளாளர்
ஜனாப் : M . A . முகமது முஸ்தபா அவர்கள் திருக்குர்ஆன் விரிவுரை நிகழ்த்தினார்.
சேலம் வட்ட பொறுப்பாளர்
ஜனாப் : F. அஸ்லம் அவர்கள் தலைமையில்
மண்டல அமைப்பாளர்
ஜனாப் : *S.A.K.ஜெய்லானி* அவர்கள்
தொடக்க உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் மையக் கருத்தான
*எல்லோருக்குமானவர் நபிகள் நாயகம் (ஸல்...)* என்ற தலைப்பில்
இஸ்லாமிய அழைப்பாளர்
ஜனாப் : *M.அன்வர் தீன்* அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
அதைத் தொடர்ந்து *உன்னை அறிவாய்... உண்மை அறிவாய்...* புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
பிறகு
அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது அனைவரும் கலந்து கொண்டனர் அனைவருக்கும் நட்பு ரீதியான உறவை மேம்படுத்த இது ஒரு நல்ல நிகழ்ச்சியாக அமைந்தது இந்த நிகழ்ச்சியில் சகோதரர்கள் 20 நபர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
எந்த நோக்கத்திற்காக
இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேற எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவி செய்வானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.
*MEDIA SALEM*