News Channel

காந்தி ஜெயந்தி அன்று மத நல்லிணக்க மற்றும் மக்கள் ஒற்றுமை உறுதிமொழி ஏற்பு

மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக மகாத்மா காந்தி  பிறந்த நாளை முன்னிட்டு மத நல்லிணக்க, மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் காந்தி சிலை அருகே மத நல்லிணக்க மக்கள் ஒற்றுமை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டும்  அக்டோபர் 2ம் தேதி   காலை 10 மணி அளவில் ஓசூர் காந்தி சிலை அருகே இந்நிகழ்வு நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்தை விரும்பும் பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டனர்.  
ஓசூர் ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த்  சார்பாக சகோதரர் ஜாகிர் உசேன் கலந்து கொண்டார்.  
மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக சகோதரர் லெனின் கலந்து கொண்டார் . 
விவசாயிகள் சங்கம் சார்பாக தோழர் சேது மாதவன் கலந்து கொண்டார் . 
காங்கிரஸ் பேரியக்கம் சார்பாக சகோதரர் அலிமுத்தின் கலந்து கொண்டார்.  
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக தோழர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். இன்னும் பல ஒத்த கருத்து உடைய பல அமைப்புகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  
அனைவரும் காந்தி சிலை முன்பாக மத நல்லிணக்க , மக்கள் ஒற்றுமை உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.