News Channel

சமூக நல்லிணக்க மீலாது விழா

தென்னக ரயில்வே மீலாது கமிட்டியின் சார்பாக சமூக நல்லிணக்க மீலாது விழா நடைபெற்றது. தமிழ்நாடு மைனாரிட்டி கமிஷன் தலைவர் ஃபாதர் ஜோ.அருண் ,ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு மாநில செயலாளர்  SN. சிக்கந்தர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பள்ளி இறுதி தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி சிறப்பித்தனர். மீலாது கமிட்டி தலைவர் அகமது இஸ்மாயில் வரவேற்றார். செயலாளர் மொய்தீன் ஷெரிஃப் நன்றி கூறினார்.