News Channel

நல்லாசிரியர் விருது (2025) பெற்ற ஆசிரியை அவர்களை ஜமாஅத் மகளிர் அணியினர் சந்திப்பு

தேசிய நல்லாசிரியர் (2025) விருது பெற்ற ஆசிரியை திருமதி.V.விஜயலட்சுமி அவர்களை ஜமாஅத் மகளிர் அணியினர் சந்திப்பு.

உடுமலை அக்டோபர் 08.2025 அன்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH)  கிளையின் மகளிரணி   தலைவி சகோதரி A.மெஹராஜ் அவர்களின் தலைமையில் தேசிய நல்லாசியர் விருது பெற்ற ஆசிரியை V. விஜயலட்சுமி அவர்களை சந்தித்து  பொன்னாடை போர்த்தி இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

ஆசிரியை அவர்கள் நல்லாசிரியர் விருது பெற்ற அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அவர்களுடன் கலந்துரையாடல் செய்தோம். 

கலந்துரையாடலில் இஸ்லாத்தின் பெண்களின்  உரிமைகள் பற்றியும்,  பெண்கள் குறித்தான இஸ்லாத்தின் பார்வை என்ன என்பதை அவருக்கு  எடுத்துரைத்தோம்.

ஆசிரியை விஜயலட்சுமி அவர்களின் கணவர் மலையண்டி பட்டினம் தலைமை ஆசிரியர் அவரும் எங்கள் பணிகள் குறித்து மிகவும் பாராட்டினார். மேலும் உங்கள் பணி தொடர்ந்து செய்யுங்கள் என்று எங்களை  ஊக்குவித்தார்.

அவர்களுக்கு வேதவரிகளும் தூதர் மொழிகளும் மற்றும் பாலஸ்தீன வரலாறு என்ற இரு புத்தகங்கள்  அன்பளிப்பாக வழங்கினோம்.

இந்த சந்திப்பில்  வட்ட பொறுப்பாளர்கள் ஊழியர்கள்  ஆயிஷா ஹக்கீம் , ஆயிஷா பர்வீன், சபீனா, ரிஹானா , ஆதரவாளர் பிர்தௌஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்
உடுமலை மீடியா