News Channel

அண்டை வீட்டார் உறவை மேம்படுத்த பண்டிகை நாட்களில் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது

அஸ்ஸலாமு அலைக்கும். ஓசூர் ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் இந்த அக்டோபர் மாதம் அழைப்புப் பணி துறை சார்பில் அண்டை வீட்டார் ( குறிப்பாக சகோதர சமுதாயத்தினர்) உறவை மேம்படுத்த பண்டிகை நாட்களில் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது என்று மண்டல அமைப்பாளர் ஆலோசனை வழங்கினார்.
 
அதன் அடிப்படையில் இந்த தீபாவளி பண்டிகையை ஒட்டி ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் ஓசூர் அலுவலகம் அருகே உள்ள 10 குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினோம். இதில் ஆண்கள்பெண்கள் வட்டம் இருவரும் பங்கேற்றனர்.
 
முத்தாய்ப்பாக , நமது அண்டை வீட்டினரான ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் மற்றும்  சிறந்த எழுத்தாளர் டாக்டர் ஓசூர் மணிமேகலை அவர்களையும் சந்தித்து இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தோம்.