News Channel

ஒழுக்கமே சுதந்திரம் - குடும்ப அமர்வு

எல்லாம் வல்ல இறைவனின் திருவருளால் ஆகஸ்ட் 28-2023 செவ்வாய் கிழமை மணப்பாறை தக்கவா பள்ளிவாசலில் ஒழுக்கமே சுதந்திரம் எனும் தலைப்பில் விழிப்புணர்வு விளக்க கூட்டம் நடைபெற்றது.
விழாவில் மாநில செயலாளர் SN.சிக்கந்தர் 
JIH திருச்சி மண்டல பொறுப்பாளர் சையத் முஹமது மணப்பாறை JIH கிளையின் தலைவர்
ஜபருல்லாஹ்  மற்றும் கிளையின் ஆண் மற்றும் பெண் உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.

 நிகழ்ச்சியில் ஒழுக்கமே சுதந்திரம் எனும் குடும்ப அமர்வு நடைபெற்றது. தலைமை உரையில் ஜனாப் சையத் முகமது அவர்கள் இன்றைய காலகட்டத்தில் ஒழுக்கத்தின் தேவைகள் பற்றி குர்ஆன் தெரிவித்துள்ள வாழ்க்கை நெறிமுறைகளை மிக அழகாக மக்களுக்கு எடுத்துக் கூறினார். தொடர்ச்சியாக  ஒழுக்கமே சுதந்திரம் என்னும் தலைப்பில் JIh மாநில செயலாளர் ஜனாப் SN சிக்கந்தர் அவர்கள்  சமகாலத்தில் இளைய தலைமுறையிடம் காணப்படும் ஒழுக்க சீர்கேடுகள் குறித்தும் அவர்களுடைய பழக்க வழக்கங்கள்  ஆடை சுதந்திரம் கருத்து சுதந்திரம் எனும் அடிப்படையில் அவர்கள் தவறாக விளக்கியுள்ளமை குறித்தும் அதற்கான சரியான புரிதல்களையும் குறித்து விளக்க உரையாற்றினார். இன்றைய சமுதாயத்தில் காணப்படும் கடும் வன்முறைகளுக்கும் உளவியல் பிரச்சனைகளுக்கும் ஒழுக்க வீழ்சியே காரணம் என்பதை நிகழ்கால சூழ்நிலைகளுடன் எடுத்துக் கூறினார்.
 இஸ்லாத்தில் ஒழுக்க வலிமை குறித்தும் அவ்வாறாக பேணப்படின் அது சமுதாயத்தில் எத்தகைய நேர்மறையான விளைவுகளை உண்டாக்கும் என்பதை குறித்தும் குர்ஆனிய கருத்துக்களோடு ஒப்பாய்வு செய்தார். நிகழ்ச்சி மணப்பாறை பகுதி JIH  பெண்கள் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்டது.
 நிகழ்ச்சியின் இறுதியில் JIH மணப்பாறை கிளையின் தலைவர் ஜபருல்லா அவர்கள் நன்றியுரையாற்றினார். எல்லாம் வல்ல இறைவனின் திருவருளால் நிகழ்ச்சியானது மதியம் 12 மணிக்கு நிறைவுற்றது.