அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
கோனிமேடு கிளை சார்பாக இன்று (20-07-2025) காலை 8.30 மணிக்கு பழவேற்காடு-காட்டூர் பகுதி சதுப்புநில காடுகளில் மரம் நடுவிழா கொண்டாடப்பட்டது. MANGROVE Foundation of India (MFI) அவர்களுடன் CIO சிறுவர்கள் இணைந்து 100க்கும் அதிகமான Mangrove மரக்கன்றுகளை MFI உடைய சதுப்புநில காடுகளில் நட்டனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக திரு.Dr.M.மாரியப்பன்(ஆராய்ச்சியாளர்,தமிழக அரசு, வனத்துறை) திரு. N.கோபி நைனார் (அறம்-திரைப்பட இயக்குனர்,சமூக ஆர்வலர்) திரு. சமீர் மற்றும் திருமதி.ஹாஜிரா சமீர் (SWOTT Founder/A.O) திரு.அப்துர் ரஹ்மான் (ஆசிரியர் -Morning News) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் சகோதரர்.சர்புதீன் (தலைவர், கோனிமேடு கிளை -JIH)அவர்கள் சிறப்பு விருந்தினர்களையும், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களை வரவேற்று, இயற்கை சார்ந்த பணியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். சகோதரி.கமருன்னிஸா (GIO பொறுப்பாளர் கோனிமேடு கிளை-JIH) அவர்கள் மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள் என்ற தலைப்பின் முக்கிய அம்சங்களை எடுத்து கூறினார்.
மேலும் CIO மாணவி அஸ்மா ஜைனப் அவர்கள் பற்றியும் அதன் பணிகள் குறித்தும் விளக்கமளித்தார். CIO மாணவி ஹாஜிரா அவர்கள் மண்ணில் கைகள்..! இந்தியாவில் இதயங்கள்..! என்ற நாடு தழுவிய பரப்புரை பற்றியும் மரம் நடுதலின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கமளித்தார். இதில் அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.