News Channel

மண்ணில் கைகள்! இந்தியாவில் இதயங்கள்!

அஸ்ஸலாமு அலைக்கும் 

மண்ணில் கைகள்! இந்தியாவில் இதயங்கள்!
நாடு தழுவிய பரப்புரையை முன்னிட்டு JIH பாலக்கரை ஊழியர்கள் வட்டத்தின் CIO  உறுப்பினர்களின் மரக்கன்றுகள் நடும் விழா 20.07.2025 (ஞாயிறு) அன்று திருச்சி குட்செட் ரோட்டில் உள்ள TELC சிறுவர் இல்லத்தில் வெகுசிறப்பாக நடைப்பெற்றது. 20க்கும் மேற்பட்ட CIO உறுப்பினர்கள் மற்றும் 70 க்கும் மேற்பட்ட TELC இல்ல சிறுமிகள் இணைந்து பேரார்வத்துடன் மரக்கன்றுகளை நட்டு மகிழ்ந்தனர்.  முன்னதாக நடைபெற்ற நிகழ்வில் கிளை செயலாளர் முனைவர். அப்துல் ரஜாக் பரப்புரையின் நோக்கத்தை விளக்கி சிறுவர்களுக்கு அறிவுரை வழங்கினார். TELC இல்லத்தின் பொறுப்பாளர் சகோ. எஸ்தர் நன்றித் தெரிவித்தார். மக்கள் தொடர்பு செயலாளர் சகோ. நவாஸ் கான் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணத்தார்.


இந்நிகழ்வில் CIO பொறுப்பாளர்கள் சகோ. முஹம்மது பாரூக், சகோ. அப்துல் அஜீஸ், ரியாத் வட்ட ஊழியர் முனைவர். அனீஸ் அஹ்மது, நிகழ்ச்சி பொறுப்பாளர் Er. முஹம்மது இப்ராஹீம் உள்பட பாலக்கரை வட்ட ஊழியர்கள் மற்றும் அபிமானிகள் என பலர் கலந்து கொண்டனர். வல்ல இறைவன் இப்பணியை ஸதக்கதுல் ஜாரியாவாக அங்கீகரித்து நம் அனைவர் மீதும் அருள் புரிவானாக! இம்மையிலும் மறுமையிலும் அளப்பரிய நற்கூலியை வழங்குவானாக!