News Channel

மரக்கன்றுகள் நடும் பல்சமய நிகழ்ச்சி

மண்ணில் கைகள்!...  இந்தியாவில் இதயங்கள்!...
HANDS IN SOIL,HEARTS WITH INDIA 

சிறுவர்கள் இஸ்லாமிய அமைப்பு (CIO) நடத்தும் மரக்கன்றுகள் நடும் பல்சமய  நிகழ்ச்சி 20.07.2025 (ஞாயிறு) கரும்புக்கடை காந்திநகர் பகுதியில் மக்கள் படிப்பகம் நூலகத்தில் மாலை பொழுதில் நடைபெற்றது. ஆரம்பமாக, CIO மாணவி ரிஃபானா  குர்ஆன் வசனம் ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். தொடர்ந்து, JIH மத்திய மண்டல செயலாளர், சகோதரி. அனீஸ் பர்வீன் அவர்கள் தலைமை உரையாற்றினார்.

அடுத்து, CIO கோவை  நபீலா கரம் சிறுவர்கள் இஸ்லாமிய அமைப்பு பற்றியும், பரப்பரை பற்றியும்  அழகாக எடுத்துரைத்தார். சகோதரி .சஃபிக்கா அவர்கள் மரம் வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும், அதனை அழிப்பதால் ஏற்படும் தீங்குகள் பற்றியும்  சிறப்பாக கூறினார். 

இந்நிகழ்ச்சியில் சிறப்ப விருந்தினர்களாக கலந்து கொண்ட திருமதி. திவ்யா (க்ரிசென்ட் மெட்ரிகுலேஷன் ஸ்கூல்) மற்றும் திருமதி. சுமித்ரா  (இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி) ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டுடன் கதைகள் சொல்லி இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கு பாராட்டுக்கு  தெரிவித்தனர். 

சிறப்பு விருந்தினர்களுக்கு  புத்தகம் அன்பளிப்பாக வழங்கி நூலகத்தின் முன் பகுதியில் CIO சிறுவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மரங்களை நட்டு வைத்து சிறப்பித்தனர் . இந்நிகழ்ச்சியில் 40 நபர்கள் கலந்து கொண்டனர்.