News Channel

புதிய பள்ளிவாசல் திறப்பு விழா

"ஜீனத் வாரிஸ் ஜும்ஆ பள்ளிவாசல் திறப்பு விழா"
கடந்த ஞாயிற்றுக்கிழமை 20.7.2025 அனறு ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சிக்கல் அருகில் உள்ள மறவாய்க்குடியில்  புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக : 

1. மௌலானா, மௌலவி ஹனிபா மன்பஈ (JIH- தமிழ்நாடு & புதுச்சேரி மாநில தலைவர்)
2. மௌலவி, முஹையிதீன் குட்டி உமரி (JIH- தமிழ்நாடு மாநில செயலாளர் ) 
3. ஜனாப் ; நசீர் அத்தாவுல்லாஹ் (JIH-சென்னை மெட்ரோ நாஜிம்) 
4. ஜீனத் வாரிசுதாரர்கள் அகமது அலி சாகிப் மற்றும் அவர்களுடைய சகோதரர்கள் (பள்ளிவாசல் வக்பு செய்தவர்கள்)  
5. ஜனாப்; துஃபைல் அஹமத் (இஸ்லாமிக் சென்டர் வேலூர் பொதுச்செயலாளர்)
6. ஜனாப்; நஜீர் ஹுஸைன் (இஸ்லாமிக் சென்டர் மதுரை துணைச் செயலாளர் & JIH-மண்டல அமைப்பாளர்)
7. மௌலவி அலி பாதுஷா மன்பஈ ஃபாஜில் ரஷாதி (தலைமை இமாம் தேரிருவேலி)
8. மௌலவி சிக்கந்தர் காஸிமி (செயலாளர் கடலாடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை)
ஆகியவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்கள். 

* இந்நிகழ்விற்கு மறவாய்க்குடி ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர்.

* கிராத்: தலைமை இமாம் மௌலவி ஜாஃபர் சாதிக் மன்பஈ -இராமநாதபுரம் தீன் நகர் ஜூம்ஆ பள்ளிவாசல் நிகழ்ச்சியில் துவக்கமாக  இறைமறை வசனம் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள்.

* வரவேற்புரை; மௌலவி முஹம்மது ரபீக் - JIH-உறுப்பினரும் சிக்கல் மதினா நகர் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
வரவேற்புரையை தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளிவாசலை உலக முஸ்லிம்களுக்கு வக்ஃபு செய்யும் நிகழ்வு திறப்பு விழா உடன் நடைபெற்றது. 

திறப்பு விழா;

ஜீனத் வாரிசுதாரர்களான
ஜனாப்: அஹமது அலி மற்றும் அவர்களின் சகோதரர்கள்
வக்ஃபு செய்தார்கள்.

சிறப்புரை;
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மட்டும் புதுச்சேரி JIH- தலைவர்
மௌலவி, மௌலானா முஹம்மது ஹனிபா மன்பஈ அவர்கள் பள்ளிவாசல் திறப்பு விழாவில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

நிகழ்ச்சியில் நிகழ்வு!

* மறவாய்க்குடி உள்ளூர் சகோதர சமுதாய சொந்தங்கள் ஊர் தலைவர்கள் மேடையில் அமர்ந்து நிகழ்ச்சியை கௌரவித்தனர். 
* உள்ளூர் சகோதர சமுதாய மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மறவாய்க்குடியை சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் சுற்று வட்டார ஜமாஅத்தை சார்ந்த 
* மதீனா நகர்  
* வல்லக்குளம் 
* பனிவாசல்
* சிக்கல் 
* தொட்டிய பட்டி 
* புத்தேந்தல்
* தத்தங்க்குடி
* ஓடைக்குளம்
* கோட்டை யேந்தல் 
* கீழச்செல்வனூர்
* வாலி நோக்கம் 
* சாயல்குடி 
* ஒப்பிலான்
* தேரிருவேலி
* பூசேரி
* அணிகுருந்தன்
* முஹமதியாபுரம்
* மக்கா நகர் 
* ரமலான் நகர் 
* தீன் நகர் 
* வன்னி வயல் 
* பால்கரை
* P.S.A நகர் நத்தம் 
* மேலமடை
* தேவிபட்டினம் 
* குராயூர்
* காண்டை
* சொக்க நாதன் பட்டி 
* அணைக்கரைப்பட்டி 
* ஊராம்பட்டி 
* கோடாங்கி பட்டி 
* கோட்டூர் 
மற்றும், 
விருதுநகர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஊழியர்கள்.
மேலும், இராமநாதபுரம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஊழியர்கள்.

கௌரவிப்பு ;

இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. 
சிறப்பு விருந்தினர்கள்
* JIH-மாநிலத் தலைவர்
* JIH- சென்னை மெட்ரோ நாஜிம் 
* ஜீனத் வாரிசு தாரர்கள்
* சிறப்பு அழைப்பார்கள் 
* உள்ளூர் சகோதர சமுதாய தலைவர்கள் 

அண்டை கிராமத்தில் இருந்து வந்தவர்கள் , 
பிற ஊர்களில் இருந்து வந்தவர்கள், 
பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள்;  

* முக்கியஸ்தர்களுக்கு 
* இமாம்கள் மற்றும் அந்தந்த ஜமாஅத் தலைவர்கள்
* கிராம நிர்வாகிகள் 
* அரசு நிர்வாகிகள் 
* பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் 
* உள்ளூர் தலைமை ஆசிரியர் 
* ஆசிரியர்கள்
என கிட்டத்தட்ட 120 க்கு மேலான சிறப்பு விருந்தினர்களை முக்கியஸ்தர்களை விருந்தாளிகளை 
பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது‌.


அன்பளிப்பு ;

அண்டை ஜமாஅத்தார்கள் திரளாக வந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்து துஆ செய்ததோடு மட்டுமன்றி
அன்பளிப்பு செய்தார்கள்
 * பீரோ 
* மிக்சி
* டேபிள் 
இதுபோன்று அந்தந்த ஜமாஅத்தின் நினைவாக அன்பளிப்பு செய்து தங்களுடைய அன்பை வெளிப்படுத்தினார்கள். 

விருந்து உபசரிப்பு:

புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த அத்தனை மக்களுக்கும் சுமார் 1000 நபர்களுக்கு மதிய விருந்து ஏற்பாடு செய்து உபசரிப்பு நடைபெற்றது. 

புதிய பள்ளிவாசல் திறப்பு விழா துஆவுடன் இனிதே நிறைவடைந்தன.