திருப்பூரில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் சிறப்பு தர்பியா நிகழ்ச்சி
திருப்பூர், ஜூலை 5:
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – திருப்பூர் கிளை சார்பில் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு தர்பியா நிகழ்ச்சி இன்று (05.07.2026) காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி திருக்குர்ஆன் விரிவுரையுடன் தொடங்கியது. மகளிரணி நாஜிமா சகோதரி ஹம்சா பேகம் திருக்குர்ஆன் விரிவுரையை வழங்கினார். தொடர்ந்து அமிரே மகாமி A. முகமது காசிம் தலைமை உரையாற்றினார். ஊழியர் மாமன் சாய்பு சிற்றுரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரி, திருச்சியின் பேராசிரியர் மௌலவி நூஹ் மஹ்ழரி அவர்கள், "ஒரு முஸ்லிமின் பொறுப்பு – தனிமனித மாற்றத்திலிருந்து சமூக மாற்றம் வரை" என்ற தலைப்பில் ஆழமான கருத்துகளையும் சிந்தனையைத் தூண்டும் வழிகாட்டுதல்களையும் உள்ளடக்கிய சிறப்புரையை வழங்கினார்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு G.I.O. மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அனைத்து வட்டங்களின் செயல்பாட்டு அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.
நிகழ்ச்சியின் நிறைவுரையையும் மௌலவி நூஹ் மஹ்ழரி அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பெண்கள் உறுப்பினர்கள், ஊழியர்கள், நெருங்கிய ஆதரவாளர்கள், G.I.O. மற்றும் SIO மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி இறைவனைப் புகழ்ந்து நன்றியுடன் நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்