News Channel

பத்திரிக்கை அறிக்கை

பத்திரிக்கையாளர் சந்திப்பு

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக மாநிலத் தலைமையகத்தில் இன்று (16.07.2026) காலை 11.30 மணி முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் கீழ்க்கண்ட நான்கு முக்கிய பிரச்சினைகள் குறித்து மாநிலத் தலைவர் மௌலவி A. முஹம்மத் ஹனீபா மன்பயீ அவர்கள் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் நிலைப்பாடுகளை விளக்கி உரையாற்றினார்.

1. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஊழல்
2. மக்களாட்சியைச் சூழ்ந்துள்ள ஆபத்துகள்
3. டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுதல்
4. பி.சி.எம். (BCM) இடஒதுக்கீடு

இதனைத் தொடர்ந்து, பத்திரிக்கையாளர்கள் பல்வேறு சமகாலப் பிரச்சினைகள் குறித்து கேள்விகளை எழுப்பினர்.

- தற்போதைய த.வெ.க. அரசின் செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்து என்ன?

- ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறித்து உங்கள் பார்வை என்ன?

- தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லயோலா மணி குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?

- மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

- கடந்த முறை நீங்கள் நடத்திய "அழகிய அண்டை வீட்டார்" பரப்புரையின் தாக்கம் என்ன?

- திரைப்படங்கள் அனைத்தும் தணிக்கைக் குழுவின் அனுமதியுடன் வெளியாகின்றன. அப்படியிருக்க, சில திரைப்படங்களுக்கு நீங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்?

- ஜனநாயகத்தின் மாண்புகள் சரிந்து வருகின்றன என்று நீங்கள் கூறுகிறீர்களே, அதற்கு சில உதாரணங்களை கூற முடியுமா?

- பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு மதுவே காரணம் என்று நீங்கள் ஏன் கூறுகிறீர்கள்?

- இஸ்லாத்தில் சாதி இருக்கிறதா?

எனப் பல்வேறு கேள்விகளை ஊடகத்தினர் எழுப்பினர். அனைத்து கேள்விகளுக்கும் மாநிலத் தலைவர் விரிவான விளக்கங்களுடன் பதிலளித்தார்.

இந்நிகழ்ச்சியை மாநில ஊடகச் செயலாளர் S. சாகுல் ஹமீது அவர்கள் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர்கள் ஜனாப் Y. யூசுப் பாஷா, 
ஜனாப் I. ஜலாலுதீன், 
மாநிலச் செயலாளர் 
ஜனாப் T. அஜீஸ் லுத்புல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஊடகவியலாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பல்வேறு செய்தி நிறுவனங்களின் நிருபர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவில், அனைத்து ஊடகப் பிரதிநிதிகளுக்கும் பத்திரிக்கை அறிக்கை வழங்கப்பட்டது.